உள்நாடு

சீரற்ற வானிலை – உச்சம் தொட்ட மரக்கறிகளின் விலைகள்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக ஹட்டன் பகுதி மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மரக்கறி செய்கை நிலங்கள் நீரில் மூழ்கியமையே விலை அதிகரிப்பிற்கு முக்கியமான காரணம் என வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்படி, பச்சை மிளகாய் ஒரு கிலோ 800ரூபாவிற்கும், தக்காளி ஒரு கிலோ 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

கறி மிளகாய் கிலோ ஒன்று 650 ரூபாவிற்கும், போஞ்சி கிலோ ஒன்று 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

50 அடி பள்ளத்தில் வீழ்ந்து கார் விபத்து – நால்வர் காயம்

editor

ரவி உள்ளிட்ட நான்கு பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

பாராளுமன்றமும் மூடப்பட்டது