உள்நாடு

சீரற்ற காலநிலையினால் 9 பேர் பலி – மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கையில்,

தொடரும் மழையுடனான வானிலை காரணமாக பல பிரதேசங்களில் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், சில இடங்களில் வீதிகளில் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகக் அவர் கூறினார்.

இதனிடையே 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கண்டி, பதுளை, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

editor

ஏப்ரல் 21 தாக்குதல் : அமைச்சரவையில் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு

போதைப் பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகு – SJB யின் முன்னாள் உறுப்பினர் கைது

editor