உள்நாடு

சீரற்ற காலநிலையால் இதுவரை 25 பேர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை, நுவரெலியா, மாத்தளை, கம்பஹா, கொழும்பு, மன்னார், இரத்தினபுரி, களுத்துறை, புத்தளம், அநுராதபுரம், யாழ்ப்பாணம், காலி, கேகாலை, குருணாகல், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய 17 மாவட்டங்களிலுமுள்ள, 146 பிரதேச செயலகப் பிரிவுகள் காலநிலையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் இயற்கை அனர்த்தங்களில் சிக்கி இதுவரையில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில், கேகாலை, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தலா 6 பேரும் பதுளை மாவட்டத்தில் நால்வரும் மாத்தளை, காலி, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் அனர்த்தங்கள் காரணமாக ஒருவர் காணாமல் போயுள்ளதோடு, 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதேநேரம், சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 63 ஆயிரத்து 317 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 22 ஆயிரத்து 590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 23 வீடுகள் முழுமையாகவும், 1253 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

மின்சாரக் கட்டண உயர்வு – இறுதி முடிவு குறித்து PUCSL அறிவிப்பு

editor

ICST பல்கலைக்கழகத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்ட 77 வது சுதந்திர தின நிகழ்வு

editor

இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டை விட்டு தனிப்பட்ட இலக்குகளைக் கருத்தில் கொண்டு செயல்படுவது மாபெரும் அழிவின் ஆரம்பமாகும்: ஜனாதிபதி விசேட உரை