உலகம்

சீனாவில் நிலநடுக்கம் – வீடுகள் சேதம் – 7 பேர் காயம்

சீனாவின், கான்சு மாகாணத்தில், லாங்ஸி மாவட்டத்தில் இன்று (27) அதிகாலை 5.49 மணியளவில் 5.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந் நிலநடுக்கத்தின்போது கட்டிட மேற்கூரை ஓடுகள் இடிந்து விழுந்ததில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

சுமார் எட்டு வீடுகள் இதன்போது இடிந்து விழுந்துள்ளதோடு, 100 இற்கும் அதிமான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுமார் 43 முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் உயிரிழந்த உலகின் சோகமான யானை!

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்க விலை

editor