சூடான செய்திகள் 1

சீனாவின் உதவியுடன் 13 வைத்தியசாலைகள் அபிவிருத்தி

UTV | COLOMBO – நாட்டிலுள்ள 13 வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு சீனாவிடமிருந்து எட்டரைக் கோடி டொலர் நன்கொடை கிடைத்துள்ளது.இதனை பயன்படுத்தி மீரிகம, சமாந்துறை, ஏறாவூர், பொத்துவில், ரிக்கில்லகஸ்கட, மெதிரிகிரிய, பதவிய, வலஸ்முல்ல, தலவான, மஹியங்கனை ஆதார வைத்தியசாலைகளும், தர்கா நகர், அளுத்கம, கராப்பிட்டிய பிரதேச வைத்தியசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படும் என்று சுகாதாரபோசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

குறித்த வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகளும், தாய்சேய் சிகிச்சை அலகுகளும், மருந்தக களஞ்சியங்கள் முதலான வசதிகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. செயற்றிட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் அளுத்கம பிரதேச வைத்தியசாலையின் புதிய வாட்டுத்தொகுதி ஒளடத களஞ்சியம், சுகாதார கல்விப் பிரவு போன்றவற்றின் நிர்மாண பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா சமீபத்தில் அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது.

Related posts

VIP மற்றும் VVIP வழியால் வரும் அரசியல்வாதிகளுக்கு வைக்கப்பட்ட ஆப்பு !

13ஆவது திருத்தச் சட்டத்தின் சில நடைமுறைகள் சாத்தியமற்றது – ஜனாதிபதி

அமித் வீரசிங்க தொடர்ந்தும் விளக்கமறியல்