அரசியல்உள்நாடு

சீனா பயணித்தார் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (13) இரவு சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சீனாவுக்கு பயணித்துள்ளார்.

இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி ஷீ ஜின்பிங்குடன் பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதுடன், சீனப் பிரதமர் லீ சியாங் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் தற்போதைய நிலைக்குழுவின் தலைவர் ஜாஓ லெர்ஜி ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

Related posts

கப்ராலிற்கு எதிரான மனு நீதிமன்றினால் நிராகரிப்பு

புத்தளத்தில் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களின் கட்சிக் கிளை காரியாலயங்களைத் திறந்து வைத்தார் ரிஷாட் எம்.பி

editor

“ஹக்கீம் இருக்கும்வரை அம்பாறை மாவட்ட மத்திய குழு தலைமை பதவி இல்லை” ஜவாத்