உள்நாடு

சீனா ஆய்வுக் கப்பல் ஹம்பாந்தோட்டை வந்தடைந்தது

(UTV | கொழும்பு) – இந்தியா மற்றும் சீனா இடையே சர்ச்சையை ஏற்படுத்திய சீன ஆய்வுக் கப்பல் யுவான் வாங்-5 அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் அனுமதியின் பேரில் இந்தக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தக் கப்பலின் வருகை குறித்து இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்ததுடன், சர்ச்சைக்குரிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சீனக் கப்பலின் வருகையை எதிர்வரும் 10ஆம் திகதி ஒத்திவைக்குமாறு சீன அதிகாரிகளிடம் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்திருந்தது.

எவ்வாறாயினும், இந்த கப்பல் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியுள்ளதுடன், உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் 22ஆம் திகதி வரை கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட உள்ளது.

Related posts

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் அவரது மனைவியும் விளக்கமறியலில்!

editor

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor

2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச நீர் மாநாடு அடுத்த வாரம் – ஜீவன் தொண்டமான்.