அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சீன ஜனாதிபதியை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு சீனா ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

இன்று (14) பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் (People’s Great Hall) இலங்கைப் பிரதமர் கலாநிதி கலாநிதி ஹரிணி அமரசூரியாவைச் சந்தித்தபோது, சீன ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சீனாவும் இலங்கையும் நீண்டகால பாரம்பரிய நட்பைக் கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளும் அமைதி மற்றும் சகவாழ்வு என்ற ஐந்து அம்சக் கொள்கையின் அடிப்படையில் இருதரப்பு உறவுகளைத் தொடர்ந்து வளர்த்து வருகின்றன என்று ஜி ஜின்பிங் தெரிவித்தார்.

இது பல்வேறு நாடுகளுக்கு இடையே நட்புரீதியான நடத்தை மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. மேலும், சீனா அதன் அண்டை நாடுகளுடனான அதன் இராஜதந்திரத்தில் இலங்கைக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்று சீன ஜனாதிபதி கூறினார்.

Related posts

இன்று நீர் வெட்டும் அமுலாகும் பகுதிகள்

வாகன இறக்குமதிக்கு பல பிரிவுகள் கீழ் அனுமதி வழங்கப்படும்

editor

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor