உள்நாடு

சிவனொளிபாத மலையில் 150 இளைஞர்கள் கைது

(UTV|ஹட்டன்) – சிவனொளிபாத மலை யாத்திரை ஆரம்பமாகி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த யாத்திரைக்கு சென்ற சுமார் 150 இளைஞர்கள் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் சுலனி வீரரத்ன தெரிவித்துள்ளார்.

ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட 110 சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதால் அவர்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 40 பேருக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நீதிமன்றம் முன்னிலையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிவனொளிபாத மலை யாத்திரையின் போது போதைப்பொருளுடன் வருபவர்களுக்கு எவ்வித மன்னிப்பும் பொலிஸாரினால் வழங்கப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

வத்தளை – ஜாஎல பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

editor

‘மொட்டில் உள்ள பெருமளவிலான உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு..’