உள்நாடுபிராந்தியம்

சிலாபம், தெதுறு ஓயாவில் காணாமல் போன நால்வரின் சடலங்களும் மீட்பு

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

10 பேர் கொண்ட குழுவொன்று கிரிபத்கொடையில் இருந்து சிலாபத்திற்கு இன்று (05) சுற்றுலா சென்றுள்ளனர்.

அவர்கள் சிலாபத்தில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றிருந்த நிலையில், அவர்களில் 5 பேர் காணாமல் போயிருந்தனர்.

காணாமல் போனவர்களில் ஒருவர் மட்டுமே பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் அவர் தற்போது சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து காணாமல் போன ஏனையவர்களை தேடும் நடவடிகையில் பொலிஸார், பொலிஸ் உயிர் காப்பு பிரிவினர், கடற்படையினர் மற்றும் பிரதேச மக்களும் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் காணாமல் போன நால்வரும் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Related posts

நாடு சுபீட்சமான பாதையில் – சியம்பலபிட்டிய

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்துச் செய்ய தயார் – ஜனாதிபதி அநுர

editor

நாட்டில் கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 102 ஆக உயர்வு