உள்நாடுபிராந்தியம்

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் பஸ் விபத்து – பலர் காயம்

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை (12) காலை இடம்பெற்றுள்ளது.

அதிக வேகத்துடன் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரம் மற்றும் வீடொன்றின் மதில் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த பயணிகள் பலர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் சாரதியின் கனவக்குறைவே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் திகதி நாடாளுமன்றுக்கு

இலங்கை அமைச்சர்கள் வெளிநாட்டிலும், நுவரெலியாவிலும் தஞ்சம்!!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்வு