சூடான செய்திகள் 1

சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பதில் தாமதம்

(UTVNEWS | COLOMBO) – எச்.எம்.எம். ஹரீஸ், அலிசாஹிர் மௌலானா, பைசல் காசிம் ஆகியோர் பதவியேற்பதில் தாமதமேற்பட்டுள்ளது.

தோப்பூர்கல், முனை விவகாரங்கள் தொடர்பில் சரியான இணக்கமொன்று எட்டப்படாத நிலையில் அவர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்கவிரும்பவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் ஆகியோர் நேற்று மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வைபவத்தின்போதே இந்தப் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பதவி துறந்திருந்த அமைச்சர்களில் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எச்.எம்.எம். ஹரீஸ், அலிசாஹிர் மௌலானா, பைசல் காசிம் ஆகிய மூவரும் நேற்று பதவியேற்கவில்லை.

Related posts

வெலிகட சிறைச்சாலைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை

புலமைப் பரிசில் பரீட்சை; வெளிவந்துள்ள முக்கிய அறிவித்தல்