உள்நாடு

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று செவ்வாய்க்கிழமை (28) மாலை 04.00 மணி முதல் நாளை புதன்கிழமை (29) மாலை 04.00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, காலி, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெளி நாட்டிற்கு பயணம்

இன்று 437 கொரோனா தொற்றாளர்கள்

MV X-Press Pearl கப்பலின் VDR சாதனம் இரசாயன பரிசோதனைக்கு