உள்நாடுகாலநிலை

சில இடங்களில் மழை பெய்யக்கூடும்

இன்றைய தினம் (29) மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் , மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (50-60) கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 462 ஆக உயர்வு

எமக்கு நிதி தேவையில்லை நீதியே வேண்டும் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம்.

சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு