உள்நாடுகாலநிலை

சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்

நாட்டின் தென்மேற்கு பகுதியில் பெய்து வரும் கனமழை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடமாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும், சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழைப் பெய்யக்கூடும்.

மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

பலத்த மழைக்கு வாய்ப்பு

editor

வாக்கெடுப்பு இலத்திரனியல் அமைப்பு பரிசோதனைக்கு

மதஸ்தலங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு! தொலைபேசி இலக்கமும் அறிமுகம்