உள்நாடுகாலநிலை

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களத்தின் வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

“அரசாங்கத்தால் ஜனநாயகத்திற்கு மரண அடி” – சஜித்

இலங்கை சந்தைகளை ஆக்கிரமித்துள்ள தமிழக அரிசி

விமான நிலையம் ஜனவரி மாதத்தில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகில் சிறந்த விமான நிலையமாக இயங்கும்- அமைச்சர் நிமல்