உள்நாடுகாலநிலை

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று முதல் (04) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி – இருவர் கைது.

கட்சியை மறுசீரமைக்குமாறு சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் அனுப்பிய இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

editor

விமானத்தில் பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொழும்பை சேர்ந்த ஒருவர் கைது

editor