வகைப்படுத்தப்படாத

சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் பலி

(UTV|BRAZIL)-பிரேசில் நாட்டில் உள்ள சிறை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் பலியாகினர் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரேசில் நாட்டின் வட கிழக்கில் செரா நகரம் உள்ளது. இங்குள்ள சிறைச்சாலையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று அங்கு அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் கலவரம் ஏற்பட்டது.

இந்த கலவரத்தில் 10 பேர் உயிரிழந்தனர் எனவும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவலறிந்த சிறைக்காவலர்களும், போலீசாரும் விரைந்து சென்று கலவரத்தை அடக்கினார்கள். காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சைகளை அளித்து வருகிறோம் என்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“JO constantly opposing concessions for the public” – Edward Gunasekera

Meek Mill: US rapper gets new trial after 11 years

மட்டக்களப்பில் 23100 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக வேளாண்மை