உள்நாடு

சிறைக்கைதிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தம்

(UTV|கொழும்பு) – கொரோனா தொற்று நிலைமை காரணமாக சிறைகைதிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்களினால் வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் நீதிமன்ற நடவடிக்கைகள், காணொளி தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கைதிகளை சிறைச்சாலைகளுக்கு இடமாற்றும் செயற்பாடுகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

 மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு- வசந்த முதலிகே

அதிவேக வீதிகளில் மீண்டும் களமிறக்கப்படும் STF

editor