அரசியல்உள்நாடு

சிறுவர்களின் பாதுகாப்பு என்பது சமூகத்தின் நல்வாழ்வாகும் – சஜித் பிரேமதாச

சர்வதேச சிறுவர் தினமும் சர்வதேச முதியோர் தினமும் ஆண்டின் ஒரே நாளில் கொண்டாடப்படுவது மிகவும் அர்த்தமுள்ள கொண்டாட்டமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

உலக சிறுவர்கள் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்துச் செய்தி கீழே…

‘இன்றைய சிறுவர் நாளைய முதியவர்’ என்ற சொற்றொடர் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பற்றிய நல்ல புரிதலை நமக்கு வழங்குகிறது.

சிறுவர்களின் பாதுகாப்பு என்பது சமூகத்தின் நல்வாழ்வாகும்.

சமூகத்தின் நல்வாழ்வை எதிர்காலத்திற்கு பரம்பரையாக்கும் முதியவர்கள் என்பவர்கள் ஒரு நாட்டின் முன்னோடி, சிறந்த முன்மாதிரிகளை குறியீடாக்கும் குழுவாகும்.

இந்த இரு குழுக்களையும் பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் அவர்களுக்காக சமூகம் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் மற்றும் கடமைகளை சரியாக நிறைவேற்றுவது ஒரு நாட்டின் நல்ல நிலையை எதிர்பார்க்கும் அனைவரின் பொறுப்பாகும்.

நமது சமூகத்தின் கலாசாரத்தை வளர்க்கும் நான்கு முக்கிய மத போதனைகளின் வழிகாட்டுதல்கள் நமக்கு பாரம்பரியமாக கிடைத்துள்ளன.

இந்த ஒவ்வொரு மத வழிகாட்டுதலிலும், நாம் பழக்கப்படுத்திக்கொண்ட நல்ல நடத்தைளைப் பேணுதல், சிறுவர் மற்றும் முதியவர் நமது பொறுப்பு என்று நமக்கு காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போதைய சமூகத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் முதியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பரிசீலிக்கும்போது, இந்த இரு குழுக்கள் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

ஒருபுறம் சிறுவர் துஷ்பிரயோகம், முதியவர்களுக்கு செய்யப்படும் புறக்கணிப்பு தற்போது பெருமளவில் பதிவாகும் பின்னணியில், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் குறித்து சமூகத்தை விழிப்புணர்வு செய்வதற்கான திட்டங்கள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்.

இந்த ஆண்டு சிறுவர் தினத்தின் கருப்பொருள் ‘சிறுவர்களின் உரிமைகளுக்காக முன்நிற்போம்’ என்பதாகும். சிறுவர்களின் உரிமைகள் குறித்து சமீப காலத்தில் பாராளுமன்றத்திலும் சமூகத்திலும் தீவிரமான கலந்துரையாடல் உருவாகியுள்ளது.

இது குறித்து செயல்படும்போது, நமக்கு பாரம்பரியமான கலாச்சார அடித்தளம், சாராம்சம் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடந்த காலத்தில் காட்டப்பட்ட போதனைகளை புறக்கணித்து செயல்பட முடியாது. எனவே சிறுவர்களின் உரிமைகளுக்காக முன்நிற்கும்போது, நாம் இவை அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

‘நமது நல்வாழ்வு மற்றும் நமது உரிமைகள்’ என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படும் முதியோர் தினத்தில், அந்த கருப்பொருளிலேயே முதியவர்கள் பற்றிய விளக்கம் நமது பொறுப்புகள் பற்றிய நினைவூட்டலும் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் முதியோர் மக்கள்தொகை வேகமாக அதிகரித்து வருகிறது.

சமீபத்திய அறிக்கை ஒன்று காட்டியது என்னவென்றால், இலங்கையின் மக்கள்தொகையில் நூறு வயதை தாண்டிய ஏறக்குறைய ஐநூற்று நாற்பத்து ஏழு பேர் இருக்கின்றனர் என்பதாகும்.

முதியோர் மக்கள்தொகை என்பது சிறந்த கல்வி கற்ற, அனுபவங்களால் நிறைந்த குழுவாகும்.

அதேபோல் நமது நாட்டின் சுகாதார சேவை காரணமாக நல்ல சுகாதார நிலையுடன் இருக்கும் குழுவாகவும் உள்ளது. எனவே முதியோர் மக்கள்தொகையை நாட்டின் வளர்ச்சியில் பயனுள்ள வகையில் இணைத்துக்கொள்வது நமது பொறுப்பாகும்.

இது நமது நல்வாழ்வுக்காகவும், அவர்களுக்காக நாம் பாதுகாக்க வேண்டிய உரிமையாகவும் உள்ளது. இது குறித்து அரசாங்கம் சரியாக சிந்தித்து செயல்படுகிறதா என்பது கேள்விக்குரியது.

சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாளை ஒரு நாளுக்கு மட்டும் வரையறுக்காமல், ஆண்டு முழுவதும் நமது கடமை மற்றும் பொறுப்பாக செயல்படுத்த அர்ப்பணிப்போம்.

இந்த ஆண்டு சிறுவர் தினத்திலும் முதியோர் தினத்திலும் அவர்களின் நலனுக்காக நாம் செய்ய வேண்டியவை பற்றி பரந்த உரையாடலுக்கு செல்ல வேண்டும் என்பது என் நம்பிக்கை.

சஜித் பிரேமதாச
இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர்
01.10.2025

Related posts

மே 06 : நாட்டுக்காக ஒரு நாள், ஹர்த்தால் அமைப்பின் வேண்டுகோள்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வெளியிட்ட தகவல்

editor

கிழக்கு ஆளுநரின் இணைப்பாளர் பதவிகளை ஏற்க வேண்டாம் – மக்கள் காங்கிரஸ் அறிவுறுத்தல்.