வகைப்படுத்தப்படாத

சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் தீ பரவல் ; 19சிறுமிகள் பலி ; 25 பேர் காயம்

(UDHAYAM, GUATEMALA) – கோட்டமாலாவில் இடம்பெற்ற தீ விபத்தொன்றில் 19 சிறுமிகள் பலியாகினர்.

அங்குள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

மேலும் 25க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த முகாமில் கடந்த செவ்வாய்க் கிழமை குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்தே அங்கு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முகாமில் உள்ள சிறுமிகள் பாலியல் ரீதியான இம்சைகளுக்கு முகம் கொடுத்து வந்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

Related posts

‘ஏமாற்றப்பட்டு வரும் சமூகத்துக்கு கைகொடுத்து உதவுவதற்காகவே களத்தில் இறங்கியுள்ளோம்’

பல பிரதேசங்களில் மழை

Met. forecasts light showers in several areas