இன்று (01.10.2025) சிறுவர் தினத்தை முன்னிட்டு, இரு வேறு பாடசாலைகளில் சிறப்பாக நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வுகளில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
முதலில், மட்/மம ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலயம் வளாகத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.
இதில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
மேலும், இப்பாடசாலையில் மாகாண மட்ட நீச்சல் போட்டிடில் சாதனைப்படைந்த மாணவரையும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவித்தார்.
பின்னர், மட்/மம ஜெயந்தாயாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயம் இல் நடைபெற்ற சிறுவர் தின விழாவிலும் கலந்து கொண்டு, மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றினார்.
அங்கு மாணவர்கள் கலை, கலாச்சார பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதேபோல், தனது சொந்த நிதியிலிருந்து பாசாலைக்கு வழங்கிவைத்த பெயர்ப்பபலகையை திரை நீக்கம் செய்தார்.
இவ்விரு நிகழ்வுகளிலும் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்கள், மாணவர்களை உற்சாகப்படுத்தி, கல்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து வளர்ந்து, நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் பங்காற்றிட வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் பாடசாலைகளின் தேவைகளையும் கேட்டறிந்தார்.
பாடசாலை அதிபர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில், கோரளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம் தாஹிர், ஜே.எம் முனாஸ், பாசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.
-ஊடகப்பிரிவு