வகைப்படுத்தப்படாத

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் செய்த காரியம்

(UTV|NUWARA ELIYA)-ஹபுகஸ்தலாவ பகுதியில், பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்தும் 37 வயதான ஒருவர், சிறுவர் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களை கற்பிக்கும் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், சந்தேகநபரால், அவரது வகுப்பிலுள்ள சில மாணவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கமைய, அண்மையில் 6ம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவன் ஒருவனை அவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொலிஸாரிடம் வழங்கிய முறைப்பாட்டில், தன்னை துஷ்பிரயோகம் செய்த பின்னர், தனது அயல் வீட்டிலுள்ள பிரிதொரு மாணவனுக்கும் தான் இவ்வாறு செய்ததாகவும், ஆனால் அந்த மாணவன் அதனை யாரிடமும் கூறவில்லை எனவும், நீயும் அவ்வாறே யாரிடமும் இதனைக் கூறக்கூடாது எனவும் குறிப்பிட்ட ஆசிரியர், 20 ரூபாயை தனக்கு வழங்கியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவலபிடி நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்

Related posts

Case against Chief of Defence Staff postponed

Anjalika takes on Tania in Under 18 final

ஜனாதிபதி தலைமையில் வடக்கு அபிவிருத்தி மற்றும் பொதுமக்கள் குறித்து ஆராய்வு