கிசு கிசு

சிறுமியின் தலையில் புகுந்த ஆணி

(UTV|INDIA) மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் நாகின்தாஸ் பாடா பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த வழியாக சிறுமி சாந்தினி (வயது 12) நடந்து சென்றாள். அப்போது கட்டிடத்தில் இருந்து கான்கிரீட் துண்டு ஒன்று தவறி சிறுமியின் தலையில் விழுந்தது. அதில் இருந்த ஆணி சாந்தினியின் தலையின் முன் பகுதியில் புகுந்தது. உடனடியாக அவள் அருகில் உள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டாள்.

டாக்டர்கள் பரிசோதனை செய்த போது ஆணி சிறுமியின் மண்டை ஓட்டை துளைத்து 9 மி.மீட்டர் அளவுக்கு புகுந்தது தெரியவந்தது. டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் அந்த ஆணியை வெற்றிகரமாக அப்புறப்படுத்தினர். தற்போது சிறுமி நலமுடன் இருப்பதாகவும், ஒரு மாதத்துக்கு பிறகு அவளுக்கு மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

 

 

 

 

 

 

Related posts

கொரோனா கண்டறிய Self Shield

ஜனாதிபதி – பிரதமருக்கு இடையில் கடும் வாய்த்தர்க்கம்

இலங்கை வரலாற்றில் பாராளுமன்ற அமர்வுகளை அதிகளவில் ஒத்திவைத்த ஜனாதிபதி