உள்நாடு

சிறீதரன் மனோ ஒன்றாக : இராதா, பழனி வேறு பக்கம்!

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், கிளிநொச்சியில் நடைபெறும் தமிழர் ஐக்கிய மே தின ஊர்வலத்தில் மற்றும் தமிழ் தேசிய மே தின விழாவில் சிறப்பு பேச்சாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் அழைப்பை ஏற்று கலந்து கொள்கிறார்.

கூட்டணியின் பிரதி தலைவர் வே. இராதாகிருஷ்ணன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதியாக, கொழும்பில் நடைபெறும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் மே தின விழாவில் கலந்து கொள்கிறார்.

கூட்டணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரம் தலவாக்கலையில் நடைபெறும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி ஊடகங்களிடம் கூறியுள்ளதாவது,

மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில் நமது கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரை கொழும்பில் நடைபெறும்  ஐக்கிய மக்கள் கூட்டணியின் மே தின விழாவில்  கலந்து கொள்ளுமாறு அழைக்கிறேன்.

மத்திய, ஊவா மாகாணங்களில் வாழும் நமது கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரை தலவாக்கலையில் நடைபெறும் மே தின கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறேன்.

கிளிநொச்சி, வன்னி உட்பட வடமாகாணத்தில் வாழ்கின்ற நமது கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரை கிளிநொச்சியில் நடைபெறும் தமிழர் ஐக்கிய மே தின ஊர்வலத்தில் மற்றும் தமிழ் தேசிய மே தனி விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறேன்.

Related posts

கெசல்வத்த தினுக துபாயில் உயிரிழப்பு

களுத்துறை பிரதேசத்திற்கு 24 மணித்தியால நீர் வெட்டு

நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை