வளைகுடா

சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழப்பு

(UTV|DUBAI) துபாயில் அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனமான ‘ஹனிவெல்’லுக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதில் இங்கிலாந்தை சேர்ந்த 3 பேரும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவரும் பயணம் செய்தனர்.

விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சில வினாடிகளில் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

உடனே அங்கு தயார் நிலையில் இருந்த மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

Related posts

துருக்கி அமைச்சரவையில் நிதி அமைச்சர் அர்துகானின் மருமகனார்

பிரபல ஊடகவியலாளர் கொலை

இந்திய பெண்ணை கரம் பிடிக்கும் ஹசன் அலி (photo)