உள்நாடு

சியல்கோட் சம்பவத்துக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் கண்டனம்

(UTV | கொழும்பு) –  பாகிஸ்தான், சியல்கோட்டில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டமைக்கு மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“பாகிஸ்தான், சியல்கோட்டில், இலங்கையரான பிரியந்த குமார தியவதனவை கொடூரமாக எரித்து, படுகொலை செய்தமை சகித்துக்கொள்ள முடியாத, கண்டிக்கத்தக்கதும் வெறுக்கத்தக்கதுமான குற்றமாகும்.

சியல்கோட்டைச் சேர்ந்த ஒரு கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொடூரமான செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

மேலும், குற்றவாளிகளை கைது செய்வதற்கு கௌரவ.பிரதமர் இம்ரான் கான் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளுக்கு, எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.”

Related posts

இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் குறித்து IMF அதிரடி அறிவிப்பு

editor

கித்துல் – பனை உற்பத்திகளை மேம்படுத்த நடவடிக்கை

மேலும் 47 இலங்கையர்கள் நாடு திரும்பினர்