உள்நாடு

சிசுவை ICU-வில் விட்டுவிட்டு தப்பியோடிய தாய்!

(UTV | கொழும்பு) –

குருநாகல் போதனா வைத்தியசாலையில் பிரசவித்த பின்னர் கைவிட்டுச் சென்ற நிலையில் உயிரிழந்த 11 நாட்களே ஆன சிசுவின் பெற்றோரைக் கண்டுபிடித்து கைது செய்யுமாறு குருநாகல் பதில் நீதவான் சட்டத்தரணி ஜயபிரேம பி. தென்னகோன் குருநாகல் தலைமையக பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

வைத்தியசாலையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஆண் குழந்தை ஒன்றே உயிரிழந்தது.
குருநாகல் போதனா வைத்தியசாலையில் குழந்தையின் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பதில் நீதவான் பொலிஸாருக்கு குறித்த உத்தரவை வழங்கியுள்ளார். குழந்தையைப் பெற்றெடுத்த தாய், குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துவிட்டு யாரிடமும் சொல்லாமல் சில நாட்களுக்கு முன் ​வைத்தியசாலையில் இருந்து வௌியேறியுள்ளார்.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்துள்ளது. இதன்படி, உயிரிழந்த சிசுவின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பெற்றோரைக் கண்டுபிடித்து அவர்கள் தொடர்பான DNA பரிசோதனையை மேற்கொள்ளுமாறு பதில் நீதவான் சட்டத்தரணி தென்னகோன் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சிசுவின் பெற்றோர் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும் என்ற தகவலையும் கவனத்தில் கொண்ட பதில் நீதவான், அவர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடியாதவாறு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.

பொல்கஹவெல கொடவெல பிரதேசத்தில் வசிக்கும் இளம் தம்பதியரே இந்த சிசுவின் பெற்றோர் என சந்தேகிக்கப்படுவதாகவும், தம்மி அபேசிங்க என்ற இளம் யுவதியே குழந்தையை பிரசவித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்கள் கொடுத்த முகவரி போலியானது என சந்தேகிக்கும் பொலிஸார், அவர்களை கைது செய்வதற்காக அவர்கள் மறைந்திருக்கும் இடங்களில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பல்கலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல்

மாணவர் குறைவாகவுள்ள பாடசாலைகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு முன் மாற்று நடவடிக்கை அவசியம் – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor

இடைக்கால அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு