உள்நாடு

சிங்கள பெண்மணியிடம் அத்துமீறி கட்டியணைத்த சந்தேக நபர் கைது!

(UTV | கொழும்பு) –

வாழைப்பழம் விற்பனைக்காக தென் பகுதியில் இருந்து கல்முனை பகுதிக்கு வருகை தந்த சிங்கள பெண்மணியிடம் அத்துமீறி கட்டியணைத்த சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொதுச்சந்தை பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவராவார். சம்பவ தினமான இன்று முற்பகல் வியாபார நடவடிக்கையில் குறித்த பெண் ஈடுபட்டு கொண்டிருந்த சமயம் 49 வயது மதிக்கத்தக்க மொனராகலை பகுதியை சேர்ந்த சந்தேக நபர் இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

இதன் போது பாதிக்கப்பட்ட குறித்த பெண் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

”எனது முதலாம் ஆண்டு நிறைவு விழா தேவையில்லை” அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட ஜனாதிபதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் இறுதிக் கட்டத்தில்

editor

இனவாதத்தை தூண்டிவிட ஒரு தரப்பினர் நல்லிணக்க சட்டமூலத்தை தூக்கிப் பிடிக்கிறது – நீதியமைச்சர் அலி சப்ரி

editor