உள்நாடு

சிங்கப்பூரில் அதிஉயர் பதவி வகிக்கும் அர்ஜுன் மகேந்திரன்

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், சிங்கப்பூரில் முக்கிய பதவி வகிப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரிலுள்ள “விஸ்டம் ஓக்” என்ற முன்னணி முதலீட்டு நிறுவனத்தில். அர்ஜுன் மகேந்திரன் முதலீட்டு நிபுணராக பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது.

நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் முதலீடுகளைக் கட்டுப்படுத்துதல், நிதி வளங்களை நிர்வகித்தல், பங்குச் சந்தை மற்றும் பத்திர முதலீடுகள் தொடர்பான ஆலோசனை சேவைகளை வழங்குதல் ஆகியவை அவரது முக்கிய பொறுப்புகளில் அடங்குவதாகவும் சமூக ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

சிங்கப்பூரில் 2016 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட விஸ்டம் ஓக் என்ற கம்பனி சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் செயல்படுகிறது. இந்நிறுவனம் தற்போது 07 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடுகளை நிர்வகிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிறுவனத்துடன் அவர் செய்த பணிக்காக மகேந்திரன் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து 2016 ஆம் ஆண்டு அர்ஜுன மகேந்திரன் விலகியிருந்தார்.

பிணைமுறி மோசடி வழக்கை எதிர்கொள்ள நேர்ந்ததால், அவர் சிங்கப்பூர் சென்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு இவரை நாடு கடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை சிங்கப்பூர் அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை.

Related posts

மீன் பிடி தொழிலுக்காக கடலுக்குச் சென்ற இரண்டு படகுகள் மாயம்.

அபிவிருத்தி திட்டங்களை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை – பிரதமர் ஹரிணி

editor

இராணுவத்தினால் புதிய படையணியை ஸ்தாபிப்பு