அரசியல்உலகம்விசேட செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து இலங்கை கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் பல உள்ளன – சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின் மூன்றாவது நாளான இன்று (22) சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் அவர்களை அவரால் சந்திக்க முடிந்தது.

இந்த சந்திப்பில் இலங்கையின் சிங்கப்பூர் உயர்ஸ்தானிகர் எஸ். சந்திரா தாஸ் மற்றும் பேட்ரிக் டேனியல் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதில் இரு தரப்பினரும் சிங்கப்பூரின் வளர்ச்சிப் பாதை குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்தனர்.

அதில் சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்குக் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் பல உள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

1950 மற்றும் 1960 தசாப்தங்களில் சிங்கப்பூர் இலங்கையின் வளர்ச்சி நோக்குநிலையைப் பின்பற்றி வளர்ச்சித் திட்டங்களை தயாரித்து தற்போது காணப்படுகின்ற விரைவான வளர்ச்சியை அடைந்துகொண்டது.

ஆனால் இன்று இலங்கை வெற்றியின் முன்மாதிரியாக சிங்கப்பூரைப் பார்க்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கே குறிப்பிட்டார்.

இதில் ஒரு நாடாக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று சமூக-பொருளாதார வளர்ச்சி, கல்வி மற்றும் சுகாதார சேவைத் துறைகளில் சிங்கப்பூர் அடைந்த முன்னேற்றத்திலிருந்து இலங்கைக்குக் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் பல உள்ளன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கே வலியுறுத்தினார்.

சிங்கப்பூரின் வளர்ச்சிப் பயணம் குறித்து அமைச்சர் கே. சண்முகம் கருத்துத் தெரிவிக்கையில் தனது தேசம் விரைவான முன்னேற்றத்தை அடைவதற்காக நீண்டகால நோக்கத்துடன் செயல்பட்டது என்றும் அதில் சிங்கப்பூரும் கணிசமான சவால்களை எதிர்கொண்டது, தூரநோக்குத் திட்டம் மற்றும் ஆட்சி குறித்த மரபுவழி தனது நாட்டை புதிய பாதையில் கொண்டு சென்றதாவது பிரதமர் லீ குவான் யூவின் உறுதியான தலைமையும் துணிச்சலான முடிவெடுத்தலும் மூலமாக என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் எதிர்கால வெற்றி தேசிய ஒற்றுமை, நிறுவன ஒருமைப்பாடு மற்றும் மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் ஒழுக்கமான, நீண்டகால நோக்கத்தைப் பின்பற்றுவதில் தங்கியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் ஒருமுறை இங்கே உறுதிப்படுத்தினார்.

சிங்கப்பூரின் முன்மாதிரியிலிருந்து உத்வேகம் பெறுவதன் மூலம், இலங்கைக்கு ஸ்திரத்தன்மை, செழுமை மற்றும் சமூக முன்னேற்றம் நோக்கிய நிலையான பாதையை உருவாக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

-ஊடகப்பிரிவு

Related posts

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் மைத்திரி கருத்து

சர்வதேச இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சியை பார்வையிட்ட சஜித்

editor

முன்னாள் அமைச்சர் கெஹெலிய உள்ளிட்ட குடும்பத்தினருக்கு குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு

editor