உள்நாடுபிராந்தியம்

சிகிச்சைக்காக வந்த 19 வயது பெண் பாலியல் துஷ்பிரயோகம் – டாக்டர் கைது – இலங்கையில் சம்பவம்

சிகிச்சைக்காக வந்த 19 வயது பெண்ணை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மருத்துவரை இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு தலைமை நீதவான் ரகிதா அபேசிங்க உத்தரவிட்டார்.

நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையில் பணியாற்றிய மாரவிலவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்டவர் ஏப்ரல் 2 ஆம் திகதி நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார பணியகத்தில் வழங்கிய முறைப்பாட்டின் பேரில் நீண்ட விசாரணைக்குப் பிறகு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதம இன்ஸ்பெக்டர் தல்வத்தே, உதவிம் பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டர் எம்.எஸ். ஹசீம் மற்றும் சார்ஜென்ட் பிரசன்னா ஆகியோர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Related posts

நாளை முதல் சில ரயில் சேவைகள் இரத்து

ஜனாதிபதியின் மாமியார் கலிபோர்னியாவில் காலமானார்

ஊரடங்கு உத்தரவை மீறிய 44 ஆயிரம் பேர் கைது