சிவப்பு லேபள் கொண்ட கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து வெளியில் விடுவித்தமை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுத்துறை (சிஐடி) ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை வரவழைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிஐடி நாடாளுமன்றத்திடம் தனது முகவரியைக் கோரியதாகவும் அதை அவர்கள் வழங்கியதாகவும் முஜிபுர் ரஹ்மான் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
“விசாரணையை நடத்திய குழுவின் அறிக்கையை நான் சபையில் தாக்கல் செய்த பின்னர் கொள்கலன் பிரச்சினை குறித்து சிஐடி என்னிடம் கேள்வி கேட்கும் என்பதை நான் அறிவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.