அரசியல்உள்நாடு

சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (07) பிற்பகல் 1.30 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதி நிதியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்கள் குறித்து நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டிருந்தார்.

Related posts

கைதான இளைஞன் உயிரிழப்பு – விசாரணைகளை துரிதப்படுத்த பணிப்பு

’74 வருட சாபக்கேட்டை முடிவுக்கு கொண்டு வருவோம்’ – ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

வெற்றியடைந்த பேச்சுவார்த்தை – 75 நாட்கள் போராட்டம் நிறைவுக்கு.