அரசியல்உள்நாடு

சாளைம்பக்குளம் ஆயிஷா வித்தியாலயத்துக்கு ரிஷாட் பதியுதீனினால் ஒலிபெருக்கி அன்பளிப்பு!

வவுனியா சாளைம்பக்குளம் ஆரம்பப் பாடசாலையான ஆயிஷா வித்தியாலயத்தின் நீண்டகாலத் தேவையாகக் காணப்பட்ட ஒலி பெருக்கி வசதி தற்போது செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரான வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இந்த ஒலி பெருக்கி வசதியை செய்து கொடுத்துள்ளார்.

இது தொடர்பில் பாடசாலையின் அதிபர் திருமதி பிரதாஸ் பகீர்தி தெரிவிக்கையில்,

எமது பாடசாலை மாணவர்களின் தேவை கருதி என்னால் ஒலி பெருக்கி ஒன்றின் தேவை உணரப்பட்டது.

விசேடமாக, காலை நேரத்தில் மாணவர்கள் ஆராதனை செய்வதற்கும் வேறு தேவைகளுக்குமாக இந்த ஒலிபெருக்கி முக்கிய தேவையாக அமைந்தது

இது தொடர்பில் கடந்த மாதம் 13 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கையானது சாளம்பைக்குளம் பள்ளிவாசல் தலைவர் ஊடாக முன்னாள் அமைச்சரான ரிஷாத் பதியுதீன் எம்பியின் கவனத்துக்கு செல்லப்பட்டது.

இதனையடுத்து ரிஷாத் பதியுதீனால் கொள்வனவு செய்யப்பட்ட ஒலி பெருக்கி உடனடியாக எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்காக பாடசாலை சமூகம் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலைகளில் மூன்றாம் தவணை இன்றுடன் நிறைவு!

O/L பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தல்.

கானியா பெனிஸ்டருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்