உள்நாடு

சாரதியை சரமாரியாக தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – கொழும்பு மருதானை பகுதியில் ஆட்டோ சாரதி ஒருவரை இரும்புக் கம்பி மற்றும் வாள்கள் கொண்ட குழுவினர் தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மருதானை பகுதியில் கடந்த 10 ஆம் திகதி இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்டோவை பின்னோக்கி செலுத்தப்பட்டபோது, நபரொருவர் மீது மோதிய நிலையில், மோதப்பட்ட நபருக்கும் சாரதிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் குறித்த ஆட்டோ நிறுத்தப்பட்டிருந்த வேளையில் வாள்களுடன் அவ்விடத்துக்குவந்த குழுவொன்று சாரதியை சரமாரியாக தாக்கும் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

சந்தேக நபர்கள் சாரதியை மட்டுமல்லாது ஆட்டோவை தாக்கி சேதப்படுத்தி அதனை புரட்டிப்போடும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த 22 வயதான ஆட்டோ சாரதி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related posts

கொரோனாவிலிருந்து 3,100 பேர் குணமடைந்தனர்

மேலும் 2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் தாயகத்திற்கு

கடன் பெற்றவர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு