உள்நாடுபிராந்தியம்

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி சிறுவன் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது – மூவர் காயம்!

கம்பஹா – உடுகம்பொல, வீதியவத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை (20) பிற்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்ற கார் விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி சிறுவன் ஒருவனால் ஓட்டிச் செல்லப்பட்ட கார் ஒன்றே தொலைபேசி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது காரில் பயணித்த மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 706ஆக உயர்வு

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பம்

பீரிஸ் உடன் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்