உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) –  சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக மாற்று வழிமுறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்பட்ட அட்டைகள் மிக குறைவாக காணப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒஸ்ட்ரியாவில் இருந்து குறித்த அட்டைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

சாரதி அனுமதிபத்திரத்திற்கான அட்டைகள் தீர்ந்துவிடுமாயின், அதற்கான மாற்று முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சொற்பளவான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான அட்டைகளே கையிருப்பிலுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் அழகக்கோன் நியூஸ்பெஸ்ட்டுக்கு உறுதிப்படுத்தினார்.

Related posts

தேசபந்து தென்னகோனை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்ற பணிப்பு

STF இற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

திங்கள் முதல் சீனி விலையில் குறைவு