கிசு கிசு

சாயிஷாவுக்கும் ஆர்யாவுக்கும் விரைவில் திருமணமா?

(UTV|INDIA)-தமிழ் திரையுலகில் இளம் நடிகர்களில் ஒருவராகிய ஆர்யாவுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி கடந்த சில ஆண்டுகளாகவே வெளிவந்தது. இதற்காக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தியும் அதிலும் பெண் அமையவில்லை.

இந்த நிலையில் நடிகை சாயிஷாவை ஆர்யா திருமணம் செய்யவுள்ளதாக அவ்வப்போது வதந்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த வதந்தி உண்மையாகியுள்ளது. இருவரும் இணைந்து ‘கஜினிகாந்த்’ திரைப்படத்தில் நடித்தபோது காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

ஆர்யா, சாயிஷா திருமணம் குறித்து இருவீட்டார்களும் பேசி முடிவெடுத்துள்ளதாகவும், வரும் மார்ச் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்கள் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருமணத்திற்கு தமிழ் திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்து தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆர்யாவின் நெருங்கிய நண்பர் விஷாலின் திருமண தேதியும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

தமிழ், முஸ்லிம் மாணவர்கள் 11 பேரை கடத்தி கொலை செய்து ராஜபக்ஷர் கடலில் போட்டனர்

தகவல் ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை அரச நிறுவனங்களை பாதிக்குமா?

அக்கினிச் சுவாலையில் இருந்து விடுதலையான உடல்களுக்கு தனித்தீவு