அரசியல்உள்நாடு

சாமர சம்பத்துக்கு ஒரு தொகை குற்றப்பத்திரிக்கை உள்ளது – அமைச்சர் கே.வி.சமந்த வித்தியாரத்ன.

பதுளை மாவட்ட முன்னாள் அமைச்சரும் பராளுமனற உறுப்பினருமான சாமர சம்பத் அவர்களுக்கு ஒரு தொகை குற்றப்பத்திரிக்கை கானப்படுவதாக பெருந்தோட்ட மற்றும் சமுக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் கே.வி. சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார் 31.01.2025. வெள்ளிக்கிழமை ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்

அவரோடு எனக்கு தனிப்பட்ட எந்த கோபங்களும் கிடையாது அவருக்கு என் மீது தனிப்பட்ட கோபங்கள் எதுவும் இருப்பது தொடர்பில் எனக்கு ஒன்றும் தெரியாது பட்டை ஒன்றின் ழூலம் நாயின் வாழை நிமிர்த்த முயற்சி செய்தாலும் அதனை நிமிர்த்த முடியாது என ஒரு பழமொழி உள்ளது.

ஆகவே சாமர சம்பத் போல் என்னால் செயற்பட முடியாது.

பெருந்தோட்ட பகுதியில் பாரிய பிரச்சினைகள் கானப்படுகிறது அந்த வகையில் முதலில் அநேகமாக வீட்டு பிரச்சினை கானப்படுகிறது வீடுகள் அமைக்க வேண்டுமானால் அதற்கான கானிகள் வேண்டும் ஆகையால் அவர்களுக்கான வீட்டுரிமை கானி உரிமை முகவரி என்பவற்றை முதலில் பெற்றுக்கொடுக்க வேண்டும் இந்த வருடத்தில் 5400 வீடுகள் அமைக்கப்பட உள்ளது அதற்கான பேச்சி வார்த்தைகளை எமது அமைச்சின் ஊடாக நாம் முன்னெடுத்து வருகின்றோம் அதற்கான முதற்கட்ட பணியை எதிர்வரும் மாதங்களில் ஆரம்பிக்கப்படவிருக்கின்றோம் கடந்த காலங்களில் அரிசிக்கான தட்டுபாடு நாட்டில் நிலவியது நாங்கள் அரசாங்கத்தை பொருப்பேற்கும் போது நெல்களஞ்சியசாலை விருச்சோடி கானப்பட்டது நெல் களஞ்சியசாலையில் ஒரு லொறி மாத்திமே இருந்தது ஆகவே சாவாலுக்கு மத்தியிலே இதனை பொருப்பேற்றோம் கடந்த அரசாங்கத்தை நாங்கள் விமர்சனத் செய்வதற்கு அதிகாரமில்லை இந்த பிரச்சினைக்கு நாம் தீர்வினை பெறவேண்டும்.

அதிகமான விலைக்கு நெல்லினை விற்பனை செய்தால் ஜந்து இலடச்சம் ருபாய் தண்டப்பணம் செலுத்த வேண்டி நேரிடும் 76 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்து அவர்கலாள் செய்து கொள்ள முடியாததை எமது அரசாங்கத்தின் ஊடாக செய்து கொள்ள முயற்சிக்கிறார்கள் எதிர்கட்சியினர் இந்த நாட்டு மக்களுக்கு தெரியும் ஒரு நோயாளியை ஒரே தடவையில் மருந்தினை வழங்கி குணமாக்குவது என்பது கடினமான செயல் என்பது தெரியும் 76 வருடமாக இவர்கள் இந்த நாட்டை வீனடித்து விட்டார்கள் மக்களிடம் ஒன்றை கூறுகிறோம் இந்த நாட்டை சுத்தப்படுத்தி சிறந்த நாடாக மக்களிடம் ஒப்படைப்போம்.

பாராளுமன்றத்தை மக்கள் சுத்தப்படுத்தி கொடுத்தது போல் உள்ளுராட்சி மன்றங்களையும் நாட்டு மகக்ள் ஊழல்வாதிகளிடம் ஒப்படைக்காமல் தேசிய மகக்ள் சக்திக்கு அனுமதியினை ஆனையினை வழங்குவார்கள் திருடர்களை மக்கள் தற்போது இனங்கண்டுள்ளர் ஆகவே பாராளுமன்றத்தை சுத்தம் செய்தது போது உள்ளுராட்சி மன்றங்களையும் மக்கள் சுத்தபடுத்தி தேசிய மக்கள் சக்தியிடம் ஒப்படைப்பார்கள் என குறிப்பிட்டார்.

-பொகவந்தலாவ நிருபர் எஷ்.சதீஷ்

Related posts

250 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி வைப்பு

editor

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor

சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமனவுக்கு பிணை

editor