வகைப்படுத்தப்படாத

சாதாரண தரம் 06 பாடங்களாக மட்டுப்படுத்தப்படும்; அனைத்து மாணவர்களுக்கும் உயர் தரக் கல்வி

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் கட்டாயப் பாடங்களின் எண்ணிக்கையை 06 ஆக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார்.

கல்வியில் தரமான மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக கல்வியமைச்சர் கூறியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு மாணவர் காப்புறுதி தினத்தை முன்னிட்டு நுகேகொட அநுல வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அதேநேரம் அடுத்த ஆண்டு ஆரம்ப பகுதியில் சாதாரண தரத்தில் இருந்து உயர் தரத்திற்கு தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கு டெப் (TAB) வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் 2019ம் ஆண்டாகும் போது எந்தவொரு மாணவர்களும் சாதாரண தர பரீட்சைக்குப் பின்னர் நின்று விடாமல் அனைத்து மாணவர்களும் உயர் தரத்திற்கு செல்லும் நிலை உருவாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Several dead as gunmen storm Somali Hotel

வெனிசுவேலா நகரில் உள்ள பொலிஸ் நிலைய சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் மற்றும் தீயினால் 68 பேர் பலியாகியுள்ளனர்.

නුවරඑළිය කේබල් කාර් ව්‍යාපෘතියට කැබිනට් අනුමැතිය.