உள்நாடு

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகளுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கல்வியாண்டு 2021 (2022) இற்கான கல்வி பொது சாதாரண தர பரீட்சைக்கு தனிப்பட்ட ரீதியில் தோற்றுவதற்கு எதிர்பார்த்துள்ள பரீட்சாத்திகளுக்கு பரீட்சை திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதற்கமைய, விண்ணப்பங்கள் இணையவழி ஊடாக மேற்கொள்ளும் முறை குறித்து இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக தனிப்பட்ட பரீட்சாத்திகளின் விண்ணப்பங்கள் 2021.12.20 ஆம் திகதி தொடக்கம் 2022.01.20 ஆம் திகதி வரையில் இணையவழி ஊடாக கோரப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிவித்துள்ளார்.

இதற்காக விண்ணப்பிக்கும் முறை தொடர்பில் ஆலோசனை மற்றும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வது தொடர்பாக இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www..doenets.lk அல்லது Exams SRI LANKA என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

CEYPETCO விலையை உயர்த்தினால் போக்குவரத்துத் துறை தாங்காது

பாம்பு தீண்டி பெண் தோட்டத் தொழிலாளி பலி!

72 தொழிற்சங்கங்கள் நாளை தொழிற்சங்க நடவடிக்கை!