உள்நாடு

சாதாரண தர பரீட்சை முடிவுகளும் மாணவர்களுக்கான அறிவிப்பும்

(UTV | கொழும்பு) –  2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகள் தொடர்பில் தகவல் அறிய விரும்புவோர் தம்மை தொடர்பு கொள்ளுமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்காக வழங்கப்பட்டுள்ள இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுமாறு மாணவர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 011 2 784 208, 011 2 784 537, 011 3 140 314 என்ற தொலைபேசி இலக்கங்கள் அல்லது 1911 என்ற விசேட இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு தகவல் பெற முடியும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை முழுவுகள் நேற்று இரவு இணையத்தளம் ஊடாக வெளியிடப்பட்டுள்ளதென பரீட்சை திணைக்கள ஆணையாளர் சதத் பூஜித் தெரிவித்துள்ளார்.

Related posts

கடற்படை உறுப்பினர்களில் மேலும் 41 பேர் குணமடைந்தனர்

VAT வரி திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் – பாராளுமன்றத்தில் அறிவித்தார் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி

editor

பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பிலான சுகாதார நிபந்தனைகள்