விளையாட்டு

சாதனை படைத்த சமரி அத்தபத்து.

ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கும், மலேசிய அணிக்கும் இடையிலான போட்டி தற்போது தம்புள்ளையில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது.

அந்தப் போட்டியில் இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல் 119 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடங்கலாகவே சமரி அத்தபத்து  119 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

ஆசிய கிண்ண மகளிர் டி20 போட்டியில் பெறப்பட்ட முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் ஒக்டோபரில் ஆரம்பம்

நாடுதிரும்பிய ஆசிய மெய்வல்லுனர் போட்டி வீரர்கள்

இங்கிலாந்து 03 விக்கட்டுகளை இழந்து 188 ஓட்டங்கள்