அரசியல்உள்நாடு

சவூதி அரேபியாவின் ஸ்தாபகர் தின நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு | வீடியோ

சவூதி அரசின் ஆரம்ப வரலாற்றையும், பண்பாட்டு பெருமையையும் முன்னிறுத்தி கொண்டாடப்படும் சவூதி அரேபிய ஸ்தாபக தின நிகழ்வும், இலங்கை-சவூதி அரேபிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர நட்பறவு ஆரம்பமாகி 50 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்ட விருந்துபசார நிகழ்வும் நேற்று (22) மாலை கொழும்பில் மிக விமர்சியாக இடம்பெற்றது.

இவ்வரலாற்று சிறப்புமிக்க கொண்டாட்ட நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வானது சவூதி அரேபியாவின் வரலாற்று பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை நினைவுகூருவதுடன், இலங்கைக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்து காணப்படுகின்றது.

வீடியோ

Related posts

இன்றும் பல கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

இன்றுமுதல் உயர்த்தப்பட்ட எரிபொருட்களின் விலை உயர்வு! (விபரம்)

வடக்கின் அரசியல் தலைவர் ஜனாதிபதி அநுரவுக்கு வழங்கிய வாக்குறுதி

editor