வகைப்படுத்தப்படாத

சவுதி தலைமையிலான படைகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – சவுதி தலைமையிலான கூட்டணி யேமனிலுள்ள ஒரு தடுப்புக்காவல் நிலையத்தை குறிவைத்து நடத்திய தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

யேமன் அரசுப்படைக்கு ஆதரவாக செயல்படும் சவுதி தலைமையிலான அணி, தாங்கள் நடத்திய தாக்குதலில், ஒரு ட்ரோன் மற்றும் ஏவுகணை தளம் அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த வான்வழித் தாக்குதலில் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள சிறைச்சாலை ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதாக சவுதி தலைமையிலான அணியை எதிர்த்து செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

யேமனில் உள்ள ஐ.சி.ஆர்.சியின் தூதுக்குழுவின் தலைவரான பிரான்ஸ் ரசன்ஸ்டைன், தங்களது அமைப்பு நிகழ்விடத்திலிருந்து உடல்களை அப்புறப்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக அனில் ஜெயசிங்க

Veteran Radio Personality Kusum Peiris passes away

இன்றும் நாளையும் இணையதள சேவைகள் முடக்கம்