உலகம்

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தை தாண்டியது

(UTV|கொழும்பு)- சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 101,914 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3,045 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,01,914 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 712 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜப்பான் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா

அகதிகளை வெளியேறுமாறு பாக்கிஸ்தான் அரசாங்கம் உத்தரவு!

ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமர் காலமானார்