உள்நாடு

சளைக்காது சாதித்த பார்வை இழந்த மாணவி ரவிச்சந்திரன் ஜெனிபர்

வெளியான 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலையத்தில் பரீட்சைக்கு தோற்றிய பார்வை இழந்த மாணவியொருவர் சித்தியடைந்துள்ளார்.

மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டில் கல்வி பயிலும் ரவிச்சந்திரன் ஜெனிபர் என்கின்ற மாணவியே இவ்வாறு பரீட்சையில் சித்தியடைந்தவராவார்.

மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையில் கல்வி கற்று வரும் இவர் 88 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளதாக விவேகானந்தா மகளிர் கல்லூரி பிரதி அதிபர் தம்பிராசா சிவக்குமார் தெரிவித்தார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி 132 ஆக இருந்தபோதிலும் விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி 80 ஆகும்.

குறித்த மாணவி 88 புள்ளைகளை பெற்று வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற நிலையில் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக விவேகானந்தா மகளிர் கல்லூரி பிரதி அதிபர் தம்பி ராசா சிவக்குமார், தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை தலைவர் எஸ். இருதய ராஜன் (இவரும் பார்வையற்றவர்) மாணவி ரவிச்சந்திரன் ஜெனிபர் மற்றும் தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை அதிபர் ஆகியோர் கருத்து வெளியிட்டனர்.

-ரீ. எல் ஜவ்பர்கான்

Related posts

நாட்டில் 130,000 PCR பரிசோதனைகள்

நீர்வெட்டு தொடர்பில் கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

editor

கொரோனாவிலிருந்து மேலும் 14 பேர் குணமடைந்தனர்