கிசு கிசு

சர்வதேசத்திற்கு பயந்து ‘புர்கா’ தள்ளிப்போனதா?

(UTV | கொழும்பு) – புர்காவை தடை செய்வது தொடர்பான பிரேரணை நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (16) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது, இந்த விடயம் தொடர்பில் தெரியவந்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர் இதனை தொிவித்திருந்தார்.

புர்கா மற்றும் பதிவு செய்யப்படாத மத்ரஸா பாடசாலைகளை தடை செய்தல் தொடர்பான பிரேரணையொன்றில் கடந்த 13 ஆம் திகதி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கையெழுத்திட்டிருந்துடன் அதனை திங்கட்கிழமை (15) அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

எனினும், புர்கா தடை தொடர்பில் சர்வதேச அழுத்தங்களும் இலங்கைக்கு நேரடித் தாக்கம் செலுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

சமூக வலைத்தளங்களூடாக வதந்தி?

கோட்டாபய சவாலுக்குரிய ஒரு வேட்பாளர் என்பது கசப்பான உண்மை – ஹர்ஷ

இறால்களினுள் கஞ்சா செலுத்தும் அமெரிக்க உணவகம்…