வகைப்படுத்தப்படாத

சர்வதேச மன்னிப்புச் சபை அதிருப்தி

(UDHAYAM, COLOMBO) – பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டம் கைதுகளை ஊக்குவிக்கும் என சர்வதேச மன்னிப்புச் சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சட்டமானது குற்றச்சாட்டுக்கள் இன்றி எவரையும் தடுத்து வைக்க காவல்துறைக்கு அதிகாரங்களை கொடுக்கும் என மன்னிப்புசபையின் தென்னாசிய பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையின் போர்காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாகவே பல மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன.

இந்த நிலையில் மீளமைப்புகளை மேற்கொண்டு மேலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதை தடுக்க, பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச்செய்து சர்வதேச நியமங்களுக்கு அமைய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவேண்டும்.

எனினும், புதிய அரசாங்கம் அதனை மாற்றியமைப்பதாக கூறி பதவிக்கு வந்து இரண்டு வருடங்களாகிவிட்டபோதும் இன்னும் அது நிறைவேற்றப்படவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளர்.

Related posts

சாகல ரத்நாயக்கவின் அதிரடி தீர்மானம்

காஷமீரில் ஊரடங்கு உத்தரவு

navy seize stock of dried sea cucumber from house